# அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டம் - 2026-2027 கல்வியாண்டிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

> தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டம், 2026-2027 கல்வியாண்டிற்கான விண்ணப்பங்களை ஆதிதிராவிடர், மதம்மாறிய கிறிஸ்துவ ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களிடமிருந்து வரவேற்கிறது.
- **Published**: 2026-05-04
- **URL**: https://news.nammamap.in/press-release/21694-annal-ambedkar-overseas-higher-education-scholarship-scheme

---

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்திற்கு 2026-2027 கல்வியாண்டிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

QS World University Ranking பட்டியலில் முதல் 1000 இடங்களுக்குள் உள்ள வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் முதுகலைப் பட்டம் அல்லது முனைவர் ஆராய்ச்சிப் படிப்பில் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும்.

முதுகலைப் பட்டத்திற்கு 01.04.2026 அன்று 35 வயதிற்குள்ளும், முனைவர் ஆராய்ச்சிப் படிப்பிற்கு 01.04.2026 அன்று 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

குடும்ப ஆண்டு வருமானம் ரூ.12.00 இலட்சத்தை மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பங்கள், மாணாக்கர்கள் சேர்க்கை பெறும் பல்கலைக்கழகங்களின் QS World University Ranking தரவரிசையின் அடிப்படையிலேயே பரிசீலனை செய்யப்படும்.

விண்ணப்பங்கள் 05.05.2026 முதல் 05.06.2026 வரை இணைய வழியில் மட்டுமே பெறப்படும்.

தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)