# 2026ஆம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை - அறிவிப்பு

> சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 2026-27 கல்வியாண்டிற்கான ஐந்தாண்டு ஒருங்கிணைந்த முதுகலை தமிழ் பட்டப்படிப்பு மற்றும் முதுகலை தமிழ் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை அறிவிக்கிறது, கல்வி உதவித்தொகை மற்றும் இலவச விடுதி வசதிகளுடன்.
- **Published**: 2026-05-12
- **URL**: https://news.nammamap.in/press-release/21717-tamil-nadu-government-student-admissions-2026

---

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 2026-27 கல்வியாண்டிற்கான ஐந்தாண்டு ஒருங்கிணைந்த முதுகலை தமிழ் பட்டப்படிப்பு மற்றும் முதுகலை தமிழ் பட்டப்படிப்பு சேர்க்கை நடைபெறவுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட 15 மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசால் மாதந்தோறும் ரூ.2000/- கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

இருபாலருக்கும் தனித்தனி கட்டணமில்லா விடுதி வசதி மற்றும் உணவு வசதி உள்ளது.

விண்ணப்பப் படிவங்கள் மற்றும் சேர்க்கை விதிமுறைகளை www.ulakaththamizh.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் அல்லது நேரில் பெறலாம்.

ஐந்தாண்டு ஒருங்கிணைந்த முதுகலை தமிழ் பட்டப்படிப்பு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இறுதி தேதி 2026 ஜூன் 15 ஆகும்.

முதுகலை தமிழ் பட்டப்படிப்பு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இறுதி தேதி 2026 ஜூன் 30 ஆகும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)