# மாண்புமிகு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தலைமையில் வில்லிவாக்கம் வளர்ச்சிப் பணிகள் ஆய்வுக் கூட்டம்

> மாண்புமிகு அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள் தலைமையில், வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் இன்று (14.05.2026) நடைபெற்றது.
- **Published**: 2026-05-14
- **URL**: https://news.nammamap.in/press-release/21729-villivakkam-development-works-review-adhav-arjuna

---

குறிப்பிட்ட காலத்திற்குள் வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்ற வேண்டும்

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்

போதைப் பொருள் விற்பனையை கட்டுப்படுத்த காவல்துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்

பெண்கள் செல்லும் பாதைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றி ஊரின் வெளிப்புறப் பகுதியில் கொண்டு செல்ல வேண்டும்

கல்விக் கூடத்திற்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை மேலும் குறைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

சாலைகளை சீரமைத்திட வேண்டும்

அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தில் வசிக்கும் மக்களுக்கு பட்டாவை வழங்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

தேவையான இடங்களில் மின்விளக்குகள் அமைத்திட வேண்டும்

உயரம் குறைவாக உள்ள மின்மாற்றிகளை உரிய வழிகாட்டுதலின்படி உயர்த்தி வைக்க வேண்டும்

தடையின்றி மின்சாரம் வழங்கிடவும், துணை மின் நிலையங்கள் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

பெண்களுக்கான தனி ஒப்பனை அறைகள் அமைத்திட வேண்டும்

மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

காவல் நிலையங்களில் புகார் கொடுக்க வருபவர்களிடத்தில் கண்ணியமான முறையில் புகார்களைப் பெற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் வைத்திட வேண்டும்

மின்தடை தொடர்பாக மக்கள் மின்துறை அலுவலகத்திற்கு தொடர்பு கொள்ள கட்டணமில்லா தொலைபேசி 94987 94987 என்பதை அனைத்து மக்களுக்கும் தெரியப்படுத்திட வேண்டும்

மக்களுக்கு எவ்வித தட்டுப்பாடும் இன்றி நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் வழங்கப்பட வேண்டும்

பெரும்பாலான நியாய விலைக் கடைகள் சொந்த கட்டிடத்தில் இயங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் பொறியியல் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி, மேல்நிலைப் பள்ளிகள் ஆகியவற்றை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்

நாய் தொல்லைகளை கட்டுப்படுத்துவதற்கும், கால்நடைகள் சாலையில் சுற்றித் திரிவதைப் கட்டுப்படுத்திடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

ஊழலற்ற தூய்மையான நிர்வாகம் மற்றும் திட்டங்களை எந்த ஒரு தவறும் இன்றி உரிய காலத்தில் சிறப்பாக நிறைவேற்றிட வேண்டும்

வார்டு-94, அன்னை சத்தியா நகர் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட குடியிருப்பு வாசிகளின் குறைகளை கேட்டறிந்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)