# தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் - ஐந்து நாட்கள் "தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி "

> தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் "தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி" 18.05.2026 முதல் 22.05.2026 வரை ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது. காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இந்நிறுவன வளாகத்தில் இப்பயிற்சி நடைபெறும்.
- **Published**: 2026-05-15
- **URL**: https://news.nammamap.in/press-release/21733-five-day-gold-appraiser-training

---

தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மே 18 முதல் மே 22, 2026 வரை சென்னையில் ஐந்து நாட்கள் "தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி" நடத்த உள்ளது.

பயிற்சியில் தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களின் தரம் அறிதல், கேரட் மதிப்பீடுகள், ஆசிட் சோதனை, எடை அளவு, போர்டு ரேட், ஹால்மார்க் மற்றும் போலியான நகைகளை அடையாளம் காணுதல், ஆபரணக் கடனுக்கான கணக்கீட்டு முறைகள் மற்றும் தங்க அணிகலன் வகைகள் குறித்து கற்றுத்தரப்படும்.

பொதுத்துறை, கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகளில் நகை மதிப்பீட்டாளர் பணிக்கான வாய்ப்புகள் மற்றும் மத்திய / மாநில அரசு கடனுதவி திட்டங்கள், மானியங்கள் குறித்த ஆலோசனைகள் வழங்கப்படும்.

18 வயதிற்கு மேற்பட்ட, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண்/பெண்/திருநங்கைகள்/திருநம்பிகள் இப்பயிற்சியில் சேரலாம்.

பயிற்சி முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும்.

தேவைப்படுவோருக்கு குறைந்த வாடகையில் தங்கும் விடுதி வசதி உள்ளது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)