# மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியை ஆய்வு செய்து, பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்

> மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் திரு.ஜே.சி.டி.பிரபாகர் அவர்கள் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் அவ்வை சண்முகம் சாலை, சிவசண்முகபுரம் மற்றும் எம்.கே.இராதா நகர் ஆகிய பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படை வசதிகள் குறித்த குறைகளைக் கேட்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றியும் தெரிவித்தார்.
- **Published**: 2026-05-16
- **URL**: https://news.nammamap.in/press-release/21743-tamil-nadu-speaker-inspects-thousand-lights-constituency

---

அவ்வை சண்முகம் சாலையில் கழிவு நீர் பிரச்சனை ஒரு மாத காலத்திற்குள் முழுவதுமாக தீர்க்கப்படும்.

அவ்வை சண்முகம் சாலையில் போக்குவரத்து இடையூறு இல்லாமல் தற்காலிக சாலை ஒரு மாத காலத்திற்குள் அமைக்கப்படும்.

எம்.கே.இராதா நகர் மற்றும் சிவசண்முகபுரம் பகுதிகளில் தேங்கியுள்ள கழிவு நீரை உடனடியாக அகற்றி, நிரந்தர தீர்வுகளை 15 நாட்களுக்குள் மேற்கொள்ளப்படும்.

எம்.கே.இராதா நகர் மற்றும் சிவசண்முகபுரம் பகுதிகளில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புக்கு புதிய வீடுகள் கட்ட திட்டங்கள் தயாராகி வருகின்றன, விரைவில் முதலமைச்சர் அறிவிப்பார்.

நக்கீரன் நகர் மற்றும் சிவசண்முகபுரம் பகுதிகளில் பழைய குடியிருப்புகளை இடித்து புதிய வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் 1,000 வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

ஆயிரம் விளக்கு தொகுதியில் உள்ள விளையாட்டு மைதானங்கள் ஆய்வு செய்யப்பட்டு, தேவையான விளையாட்டு வசதிகள் மேம்படுத்தப்படும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)