# முதலமைச்சர் எரிசக்தித் துறை செயல்பாடுகள் மற்றும் எதிர்காலக் கட்டமைப்பு திட்டங்களை ஆய்வு செய்தார்

> மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் எரிசக்தித் துறை தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் அதன் துணை நிறுவனங்களின் செயல்பாடுகள், எதிர்காலக் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள், மற்றும் 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் போன்ற முக்கிய நலத்திட்டங்களின் செயலாக்கம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
- **Published**: 2026-05-18
- **URL**: https://news.nammamap.in/press-release/21754-chief-minister-reviews-energy-operations-infrastructure-projects

---

முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் அதன் துணை நிறுவனங்களின் செயல்பாடுகள், நிதிநிலை மற்றும் எதிர்காலக் கட்டமைப்பு திட்டங்களை ஆய்வு செய்தார்.

10.05.2026 முதல் நடைமுறைக்கு வந்த 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கும் திட்டம் குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார்.

வேகமாக வளர்ந்து வரும் மாநகர, தொழில் மற்றும் விவசாய தேவைகளுக்காக நிதி மற்றும் தொழில்நுட்ப சவால்கள் இருப்பினும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளை விரைந்து மேற்கொள்ள முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

குறைந்த மின்னழுத்தம் உள்ளிட்ட அன்றாட நுகர்வோர் சார்ந்த குறைகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.

புதிய துணை மின்நிலையங்கள் அமைத்தல், பழைய மின்கட்டமைப்புகளை நவீனப்படுத்துதல், புதிய மின்கம்பிகள் அமைத்தல் மற்றும் பசுமை மின்வழித்தடம் உள்ளிட்ட திட்டப் பணிகளை விரைவுபடுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

கோடை மற்றும் பருவமழைக்காலத்திற்கு தேவையான அத்தியாவசிய மின் தளவாடங்கள் முன்கூட்டியே இருப்பை உறுதி செய்ய வலியுறுத்தப்பட்டது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)