# மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி மாண்புமிகு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் தலைமையில் தொழில்துறை சார்ந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

> மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா தலைமையில் தொழில்துறை சார்ந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு தொழில் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் நிறுவனங்களின் பணிகள் ஆய்வு செய்யப்பட்டன.
- **Published**: 2026-05-18
- **URL**: https://news.nammamap.in/press-release/21758-chief-minister-industries-review-meeting

---

தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் மற்றும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO) மூலம் செயல்படுத்தப்படும் மற்றும் திட்டமிடப்பட்ட திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

முதலமைச்சர் அவர்களின் தேர்தல் வாக்குறுதிகளின்படி புதிய தொழில் திட்டங்களை செயல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டத்தில் உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் ஆராய்ச்சி, திறன் மேம்பாட்டு மையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கையினை தயாரிக்க அறிவுறுத்தப்பட்டது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)