# விளையாட்டு வீரர்கள் அனைவரும் உயர் கல்வியை கண்டிப்பாக நிறைவு செய்யவேண்டும். மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள் தகவல்.

> அகில இந்திய அளவிலான 18 வயதுக்குட்பட்டோருக்கான கூடைப்பந்து போட்டிகளில் பங்கேற்கவுள்ள தமிழ்நாடு ஜூனியர் கூடைப்பந்து ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர், மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜூனா அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது அமைச்சர், விளையாட்டு வீரர்கள் உயர் கல்வியை கட்டாயம் முடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
- **Published**: 2026-05-20
- **URL**: https://news.nammamap.in/press-release/21766-athletes-must-complete-higher-education

---

விளையாட்டு வீரர்கள் அனைவரும் உயர் கல்வியை கண்டிப்பாக நிறைவு செய்தால் மட்டுமே விளையாட்டுத் துறை பணி ஒதுக்கீட்டின் போது உயர் அலுவலர்கள் நிலையிலான பணியினை தேர்வு செய்ய முடியும்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இளைய தலைமுறையினரின் முன்னேற்றத்தில் தனி கவனம் செலுத்தி வருகிறார்கள்.

விளையாட்டுத் துறை வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை சாதனையாளர்களாக மாற்றிட தொலைநோக்கு செயல்திட்டங்களை வகுத்து வருகிறது.

அகில இந்திய அளவிலான 18 வயதுக்குட்பட்டோருக்கான கூடைப்பந்து போட்டிகள் புதுச்சேரியில் வரும் 22.05.2026 முதல் 29.05.2026 வரை நடைபெறவுள்ளது.

மாண்புமிகு விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜூனா கூடைப்பந்து போட்டிகளை நேரில் காண திட்டமிட்டுள்ளார்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)