# விவசாயிகளின் நலன் கருதி நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல அனுமதி அளிப்பது குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம்.

> மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (20.05.2026) தலைமைச் செயலகத்தில், விவசாயிகளின் நலன் கருதி நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல அனுமதி அளிப்பது குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
- **Published**: 2026-05-20
- **URL**: https://news.nammamap.in/press-release/21769-farmers-taking-silt-from-water-bodies

---

விவசாயிகள், மட்பாண்டத் தொழிலாளர்கள் மற்றும் தனிநபர்கள் நீர்நிலைகளில் இருந்து வண்டல் மண் எடுக்க அனுமதி.

வண்டல் மண் விலையில்லாமலும், உரிமக்கட்டணம் இல்லாமலும் வழங்கப்படும்.

tnesevai.tn.gov.in இணையதளம் மூலம் வண்டல் மண் எடுக்க விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பித்த 10 நாட்களுக்குள் வட்டாட்சியர்களால் அனுமதி வழங்கப்படும்.

2026-2027 ஆம் ஆண்டிற்கான ஏரிகள் மற்றும் குளங்களின் பட்டியலை மாவட்ட ஆட்சியர்கள் அரசிதழில் வெளியிட வேண்டும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)