# தமிழ்நாடு மின்சார வாரியம்

> தமிழ்நாடு மின்சார வாரியம் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வில் பசுமை எரிசக்தி கழகத்தின் ஒதுக்கீடு மற்றும் ஒப்புதல்களில் வெளிப்படைத்தன்மை இல்லாதது தெரியவந்தது. இதன் காரணமாக திரு. வி. காசி மற்றும் திரு. பி. சந்திரசேகரன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஓய்வு பெற்ற இயக்குநர் திரு. எஸ். மங்களநாதனின் ஓய்வூதிய பலன்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
- **Published**: 2026-05-21
- **URL**: https://news.nammamap.in/press-release/21771-tamil-nadu-electricity-board-government-undertaking

---

திரு. வி. காசி, தலைமை நிதிக்கட்டுப்பாட்டு அலுவலர் (வருவாய்) தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திரு. பி. சந்திரசேகரன், தலைமை பொறியாளர் (மரபுசாரா எரிசக்தி) தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஓய்வு பெற்ற இயக்குநர் (தொழில்நுட்பம்) திரு. எஸ். மங்களநாதனின் ஓய்வூதிய பலன்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது துறைரீதியான முறையான விசாரணை நடைபெற்று வருகிறது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)