# மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை

> 21.05.2026 அன்று மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் K.G. அருண்ராஜ் தலைமையில் மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தரமான மருத்துவ சேவைகள் வழங்குதல், 'காயகல்ப்' சான்றிதழ் ஆய்வுகளை விரைவுபடுத்துதல், நிலுவையிலுள்ள 8000 தனியார் மருத்துவமனை CEA உரிமங்களை வழங்குதல் மற்றும் கிட்னி முறைகேடு தொடர்பான விசாரணையை விரைந்து முடித்தல் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது.
- **Published**: 2026-05-21
- **URL**: https://news.nammamap.in/press-release/21774-medical-medical-education-public-welfare

---

பொதுமக்கள் அதிகளவில் பயன்பெறும் வகையில் தரமான மருத்துவ சேவைகள் வழங்கப்பட வேண்டும்.

மருத்துவமனைகளுக்கு வரும் பொதுமக்களை உரிய மரியாதையுடன் அணுகி தேவையான சேவைகள் உடனுக்குடன் வழங்கப்பட வேண்டும்.

"காயகல்ப்" தரச் சான்றிதழுக்கான ஆய்வுகள் ஆண்டிற்கு ஒருமுறை நடத்தப்படுவதற்கு பதிலாக, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை (Quarterly) ஆய்வு செய்து சான்றிதழ்கள் வழங்கிட வேண்டும்.

தேங்கியுள்ள 8000 CEA (தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் உரிமம்) சான்றிதழ்களுக்கு ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவேற்றம் செய்தால் தற்காலிக சான்றிதழ்கள் உடனடியாக வழங்கி, முழுமையான ஆய்வுக்குப் பின்னர் நிரந்தர சான்றிதழ்கள் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கிட்னி முறைகேடு தொடர்பான விசாரணையை விரைந்து முடிக்க தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)