# ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் 2025-26 ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக தேர்ச்சி - செய்தி வெளியீடு

> 2025-26 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளின் மாணக்கர்களின் தேர்ச்சி விகிதம் 91.42 சதவீதமாகவும், இது முந்தைய ஆண்டை விட அதிகமாகும். மேலும், பழங்குடியினர் நலப் பள்ளிகளில் 96.66 சதவீத தேர்ச்சி விகிதம் முந்தைய ஆண்டை விட மூன்று சதவீதம் அதிகமாகும், இது மாநிலத்தின் மொத்த தேர்ச்சி விகிதமான 94.31 சதவீதத்தினை காட்டிலும் அதிகமாகும்.
- **Published**: 2026-05-21
- **URL**: https://news.nammamap.in/press-release/21775-higher-10th-pass-rate-adi-dravidar-tribal-schools

---

2025-26 ஆம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம் 91.42% ஆக உயர்வு (90.52% இலிருந்து)

2025-26 ஆம் கல்வியாண்டில் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம் 96.66% ஆக உயர்வு (93.61% இலிருந்து)

பழங்குடியினர் நலப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் மாநிலத்தின் மொத்த தேர்ச்சி விகிதத்தை (94.31%) விட அதிகம்

பழங்குடியினர் நலப் பள்ளிகளில் 321 மாணவர்கள் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்

44 பழங்குடியினர் நலப் பள்ளிகள் 100% தேர்ச்சியை அடைந்துள்ளன

இப்பள்ளிகளில் மொத்த தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டு 93% இலிருந்து தற்போது 96% ஆக உயர்வு
---
- [All articles](https://news.nammamap.in/press-release)