# அமெரிக்காவில் நடைபெறவுள்ள 2028-ஆம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக்கில் தமிழ்நாட்டிலிருந்து தகுதியான விளையாட்டு வீரர்களை தேர்வுசெய்து அனுப்ப நடவடிக்கை.

> தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, விளையாட்டு சங்கங்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்திற்குப் பிறகு, 2028 கோடைகால ஒலிம்பிக்கிற்கு விளையாட்டு வீரர்களை தயார்படுத்துவதற்கான முயற்சிகளை அறிவித்தார். இதில் திறமையாளர்களைக் கண்டறிதல், ஒலிம்பிக் பவன் அமைத்தல் மற்றும் மேம்பட்ட உள்கட்டமைப்பு ஆகியவை அடங்கும்.
- **Published**: 2026-05-22
- **URL**: https://news.nammamap.in/press-release/21776-tamil-nadu-sportspersons-2028-summer-olympics-america

---

2028-ஆம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக்கில் தமிழ்நாட்டிலிருந்து தகுதியான விளையாட்டு வீரர்களை தேர்வுசெய்து அனுப்ப நடவடிக்கை.

திறமையுள்ள விளையாட்டு வீரர், வீராங்கனைகளை கண்டறிந்து மேம்படுத்துவதற்கான தொலைநோக்கு செயல்திட்டங்கள் வகுக்கப்படும்.

போதைப்பொருள் பழக்கவழக்கங்களிலிருந்து இளைஞர்களை நல்வழிப்படுத்த விளையாட்டு துறைக்கு முக்கியத்துவம் அளித்தல்.

தமிழ்நாட்டில் அடுத்த 3-4 ஆண்டுகளில் "ஒலிம்பிக் பவன்" அமைக்கப்படும்.

மாநிலம் முழுவதும் திறமையான இளம் விளையாட்டு வீரர், வீராங்கனைகளை கண்டறிந்து பயிற்சியளிக்கும் வகையில் திறனாய்வு குழு அமைக்கப்படும்.

2028 கோடைகால ஒலிம்பிக்கில் பதக்கங்கள் பெற வாய்ப்புள்ளவர்களை இப்போதே கண்டறிந்து வெற்றியாளர்களாக திகழச்செய்திட நடவடிக்கை.

எதிர்காலத்தில் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் அதிக அளவில் நடத்துதல்.

விளையாட்டு வீரர்களுக்கான உலகத் தரத்திலான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்.

பெண்களை விளையாட்டுப் போட்டிகளில் அதிக அளவில் பங்கேற்கச் செய்ய "மினி ஒலிம்பிக்" போட்டிகள் நடத்துதல்.

தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு விமானப் பயண வசதி ஏற்பாடு.

விளையாட்டு சங்கங்களை ஒருங்கிணைத்திட விளையாட்டு மேம்பாட்டுத் துறையில் ஒரு ஒருங்கிணைப்பு அலுவலரை நியமித்தல்.

விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, தினந்தோறும் காலை 7 மணி முதல் 10 மணி வரை சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் கோரிக்கைகளை சந்திக்கலாம்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)