# மனிதவள மேலாண்மைத் துறை திட்டங்கள் குறித்து அமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

> மாண்புமிகு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. த. சரத்குமார் தலைமையில் மனிதவள மேலாண்மைத் துறை சார்ந்த திட்டங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றது. காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்பவும், போட்டித்தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கவும், ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்யவும் அமைச்சர் அறிவுறுத்தினார்.
- **Published**: 2026-05-22
- **URL**: https://news.nammamap.in/press-release/21777-minister-chairs-human-resources-management-schemes

---

அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் விரைந்து நிரப்ப வேண்டும்.

அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசு பயிற்சி மையங்கள் மூலம் போட்டித்தேர்வுகளுக்கு உரிய பயிற்சி வழங்க வேண்டும்.

பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்து உடனுக்குடன் தீர்வு காண வேண்டும்.

அரசு அலுவலகங்களில் ஊழலற்ற மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)