# கோயம்புத்தூரில் 10 வயது சிறுமிக்கு ஏற்பட்ட துயரம் குறித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களின் சமூக வலைதளப் பதிவு

> கோயம்புத்தூரில் 10 வயது சிறுமிக்கு ஏற்பட்ட கொடூர சம்பவம் குறித்து மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் ஆழ்ந்த வருத்தத்தையும் அதிர்ச்சியையும் தெரிவித்தார். இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறைக்கு விரைவான விசாரணை மற்றும் உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர அரசு உறுதி பூண்டுள்ளது.
- **Published**: 2026-05-23
- **URL**: https://news.nammamap.in/press-release/21785-chief-minister-coimbatore-girl-tragedy

---

கோயம்புத்தூர் சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தீவிர மற்றும் விரைவான விசாரணை மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிகையை உடனடியாக தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின்கீழ் கடுமையான தண்டனை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படும்.

நீதியை உறுதிப்படுத்த உடனடி மற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)