# மாண்புமிகு அமைச்சர் க.விக்னேஷ் தலைமையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆய்வு; கடுமையான அமலாக்கத்திற்கான அறிவுறுத்தல்கள்

> மாண்புமிகு அமைச்சர் க.விக்னேஷ் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை செயல்பாடுகளை ஆய்வு செய்து, கள்ளச்சாராயம் ஒழிப்பு, மனமகிழ் மன்றங்கள் மற்றும் மதுபான ஆலைகள் விதிமுறைப் படி இயங்குவதை உறுதிசெய்ய, அனைத்து மாவட்டங்களுக்கும் கடுமையான அமலாக்கத்திற்கான அறிவுறுத்தல்களை வழங்கினார்.
- **Published**: 2026-05-23
- **URL**: https://news.nammamap.in/press-release/21787-vignesh-reviews-prohibition-excise-strict-enforcement

---

மனமகிழ் மன்றங்கள் (FL2) விதிமுறைகளின்படி முறையாக செயல்படுகிறதா என்பதை மாவட்ட அளவிலான அலுவலர்கள் புலத்தணிக்கை செய்து உறுதிபடுத்த வேண்டும்.

மாவட்ட அளவிலான களப்பணியாளர்கள், கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கடத்துதல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற நடவடிக்கைகளை முற்றிலும் ஒழிக்க தொடர்ந்து தீவிரமாக கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும்.

கலால் மேற்பார்வை அலுவலர்கள், மதுபான ஆலைகள் விதிமுறைகளுக்குட்பட்டு இயங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

பொதுமக்களுக்கு கள்ளச்சாராயம், போலி மதுபானங்கள் மற்றும் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதற்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தவும், திடீர் புலத்தணிக்கை மேற்கொண்டு அவற்றை முற்றிலும் களைய தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏதேனும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், உடனடியாக சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் விதிமீறல்களுக்கு உடந்தையாக செயல்படும் அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)