# ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. சீ.ரமேஷ் அவர்கள் ஆய்வு

> மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. சீ.ரமேஷ் அவர்கள் இன்று (23.05.2026) திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு.பி.என்.ஸ்ரீதர் இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் திருக்கோயில் நிர்வாகம் மற்றும் அன்னதானத் திட்டத்தின் செயல்பாடுகள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- **Published**: 2026-05-23
- **URL**: https://news.nammamap.in/press-release/21789-minister-s-ramesh-inspects-srirangam-ranganathaswamy-temple

---

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் எவ்வித சிரமமுமின்றி விரைவாக தரிசனம் செய்ய வழிவகை செய்ய வேண்டும்.

பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிட வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகளை தொடர்ந்து கண்காணித்து வழங்கிட வேண்டும்.

அனைத்து நிலையிலும் பக்தர்கள் முழு மனநிறைவு பெற்றிடும் வகையில் செயல்பாடுகள் அமைந்திட வேண்டும்.

அலுவலர்கள், பொறியாளர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் ஒருங்கிணைந்து செயலாற்றிட வேண்டும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)