# மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் புழல் மத்திய சிறையில் ஆய்வு மேற்கொண்டு, பதிவேடுகளை கணினிமயமாக்க மற்றும் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள உத்தரவிட்டார்

> மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் இன்று (24.05.2026) புழல் மத்திய சிறையில் ஆய்வு மேற்கொண்டு, சிறைச்சாலை பதிவேடுகளை முழுவதுமாக கணினிமயமாக்க உத்தரவிட்டதோடு, போதைப்பொருள் புழக்கத்தை ஒழிக்கவும், கைதிகளுக்கான in-house bazaar அமைக்கவும் அறிவுறுத்தினார்.
- **Published**: 2026-05-24
- **URL**: https://news.nammamap.in/press-release/21792-minister-inspected-puzhal-prison-computerization-records-reforms

---

சிறைச்சாலை பதிவேடுகளை முழுமையாக கணினிமயமாக்குதல்

சிறைக்குள் போதைப்பொருள் புழக்கத்தை அறவே ஒழித்து, contraband பொருட்கள் ஊடுருவும் வழிகளை தடுத்தல்

கைதிகள் பொருட்களை வாங்குவதற்காக in-house bazaars அமைத்தல்

சிறைக்கைதிகளின் மருத்துவ அறிக்கைகளை முழுமையாக நவீனப்படுத்தி, தேவையான மருத்துவ நடவடிக்கைகளை வழங்குதல்

சிறைச்சாலைகளில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க கண்காணிப்பு கேமராக்களை கூடுதலாக பொருத்துதல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்

பார்வையாளர்கள் எளிதில் வந்து செல்லும் வண்ணம் நடைமுறைகளை எளிமையாக்குதல்

கால அளவை தாண்டி சிறையில் உள்ள விசாரணை கைதிகளுக்கு தேவையான சட்ட ஆலோசனைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் வழங்குதல்

வரவிருக்கும் நிதிநிலை அறிக்கையில் முதலமைச்சர் ஒப்புதலுடன் திட்டங்களுக்கு தேவையான நிதியைப் பெற்று ஒவ்வொன்றாக நிறைவேற்றுதல்
---
- [All articles](https://news.nammamap.in/press-release)