# மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மரு.கே.ஜி.அருண்ராஜ் அவர்கள் காவிரி, பொன்னியாறு மற்றும் திருமணிமுத்தாறு நதிகள் இணைப்பு குறித்து துறைச்சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

> மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மரு.கே.ஜி.அருண்ராஜ் அவர்கள் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று (24.05.2026) காவிரி, பொன்னியாறு மற்றும் திருமணிமுத்தாறு நதிகள் இணைப்பு திட்டம் குறித்து துறைச்சார்ந்த அலுவலர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர், விவசாய சங்க பிரதிநிதிகள் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார்.
- **Published**: 2026-05-24
- **URL**: https://news.nammamap.in/press-release/21793-linking-cauvery-ponniyar-tirumanimutharu-rivers

---

காவிரி, பொன்னியாறு மற்றும் திருமணிமுத்தாறு நதிகள் இணைப்பு திட்டம் குறித்து ஆலோசனை நடைபெற்றது.

மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை ஆறுகளுடன் இணைத்து இப்பகுதியில் உள்ள ஏரிகளை நிரப்ப முடியும்.

காவிரி ஆற்றில் இருந்து புதிய திட்டத்தின் மூலமாக மங்கலம் ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு அனைத்து ஏரிகளுக்கும் முழுமையாக பயன்படும்.

நதிநீர் இணைப்பு திட்டத்திற்கான முன்மொழிவு தயாரிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க 'NAMMA THIRUCHENGODU, NAMMA MLA' என்ற செயலி அறிமுகப்படுத்தப்படுகிறது.

தரமான மருத்துவ சேவை அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என மாண்புமிகு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

மருத்துவ சேவைகளில் தவறுகள் நடைபெறுவது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மகப்பேறு சிகிச்சை 24 மணி நேரமும் இயங்கும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)