# ஒலிம்பிக்கில் பங்கேற்கும் ஆர்வமுடைய 2 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் நிதி உதவிக் கோரியதையொட்டி உடனடியாக ரூ. 5.80 இலட்சத்திற்கான காசோலைகளை மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள் வழங்கினார்கள்.

> அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, ஒலிம்பிக்கில் பங்கேற்கும் ஆர்வமுடைய தடகள வீராங்கனை சமீஹா பர்வீன் மற்றும் நீச்சல் வீரர் அபிஷேக் ஆகிய இருவருக்கு ரூ. 5.80 இலட்சம் நிதி உதவி காசோலைகளை இன்று (25.05.2026) சென்னை நேரு விளையாட்டரங்கில் வழங்கினார்.
- **Published**: 2026-05-25
- **URL**: https://news.nammamap.in/press-release/21795-minister-aadhav-arjuna-disbursed-cheques-2-olympic-athletes

---

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் ஆர்வமுடைய தடகள வீராங்கனை சமீஹா பர்வீன்க்கு ரூ. 3 இலட்சமும், நீச்சல் வீரர் அபிஷேக்கிற்கு ரூ. 2.80 இலட்சமும் என மொத்தம் ரூ. 5.80 இலட்சம் நிதி உதவி காசோலைகள் வழங்கப்பட்டன.

விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு சங்க நிர்வாகிகள் தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரை சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் அமைச்சர் மற்றும் துறை உயர் அலுவலர்களை சந்தித்து கோரிக்கைகளைத் தெரிவிக்கலாம்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வரும் விளையாட்டரங்கங்கள், பயிற்சிக் கூடங்கள், வீரர்கள் தங்கும் விடுதிகள் ஆகியவற்றின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.

திறமையான விளையாட்டு வீரர், வீராங்கனைகளை கண்டறிந்து தேசிய மற்றும் உலக அளவிலானப் போட்டிகளில் பங்கேற்கச் செய்து சாதனையாளர்களாக திகழ தேவையான பொருளாதார உதவிகளை செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)