# கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.50,000/- வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு

> தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், கூட்டுறவு வங்கிகளில் ரூ.50,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடியையும், மற்ற பிரிவினருக்கு தரம் பிரிக்கப்பட்ட தள்ளுபடியையும் அறிவித்துள்ளார்.
- **Published**: 2026-05-25
- **URL**: https://news.nammamap.in/press-release/21798-tamil-nadu-crop-loans-waiver-small-farmers

---

கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.50,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையான கடன் தள்ளுபடி.

ரூ.50,000க்கு மேலான பயிர்க்கடன்களுக்கு குறு மற்றும் சிறு விவசாயிகளுக்கு விரிவான அடுக்கு அமைப்புப்படி தள்ளுபடி.

கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் பெற்ற இதர பெரு விவசாயிகளுக்கு தலா ரூ.5,000 தள்ளுபடி.

2025 மே 1 முதல் 2026 பிப்ரவரி 28 வரை கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களுக்கு இத்திட்டம் பொருந்தும்.

இத்திட்டத்தின் மூலம் 14,22,555 விவசாயிகள் பயனடைவார்கள்.

இதன் மூலம் அரசுக்கு ரூ.2,044.46 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்.

இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, தள்ளுபடி செய்யப்பட்ட பயிர்க்கடன் தொகையை அரசு 45 முதல் 60 நாட்களுக்குள் முழுமையாக செலுத்தும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)