# கடந்த ஆட்சியில் தனிநபர்/ ஒரு நிறுவனத்திற்கு மட்டும் மின் வாரிய முக்கிய பணிகள் - ஒப்பந்தாரர்கள் புகார். இனிவரும் காலங்களில் வெளிப்படையான நிர்வாகத்தின் அடிப்படையில் தகுதியுள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் பணிகள் வழங்கப்படும் மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் உறுதி.

> இன்று (25.05.2026) சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு மின்வாரியத்துடன் தொடர்புடைய ஒப்பந்ததாரர்கள், மின் உபகரண விநியோகஸ்தர்கள், வழங்குநர்கள் மற்றும் கொள்முதல் செய்பவர்கள் உள்ளிட்ட சுமார் 1000 பேருடன் வெளிப்படையான நிர்வாகம் மற்றும் முறைகேடுகள் தடுப்பு தொடர்பான கலந்தாய்வு கூட்டம் மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
- **Published**: 2026-05-25
- **URL**: https://news.nammamap.in/press-release/21801-contractors-complain-tneb-works-awarded-transparently

---

மின்வாரியப் பணிகள் வெளிப்படையான நிர்வாகத்தின் அடிப்படையில் தகுதியுள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் வழங்கப்படும்.

கடந்த ஆட்சியில் முறைகேடாக வழங்கப்பட்ட டெண்டர்கள் மீளாய்வு செய்யப்பட்டு, புதிய வெளிப்படையான டெண்டர் நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்படும்.

மின்துறையின் ஒவ்வொரு பிரிவிலும் தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டு, டிஜிட்டல் போர்டல் வாயிலாக வெளிப்படையான டெண்டர் முறை அமல்படுத்தப்படும்.

தகுதியுள்ள அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கப்படும்; இடைத்தரகர்களுக்கும், முறைகேடுகளுக்கும் இடமில்லை.

பணிகள் முடித்த நிறுவனங்களுக்கு காலதாமதமின்றி நிதி வழங்கப்படும்.

மின்துறையை நஷ்டத்திலிருந்து மீட்டு, லாபகரமான அமைப்பாக மாற்றப்படும்.

சோலார் மற்றும் காற்றாலை உள்ளிட்ட பசுமை எரிசக்தி திட்டங்களுக்கு தனிக்குழுக்கள் அமைக்கப்படும்.

ஓராண்டுக்குள் மின்துறையில் முழுமையான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, நஷ்டங்கள் குறைக்கப்பட்டு, சீருடனும் செழிப்புடனும் செயல்படும் துறையாக மாற்றப்படும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)