# சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

> சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் டாக்டர். வே.க. ராஜீவ் அவர்கள் தலைமையில் 25.05.2026 அன்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், கிண்டி தலைமை அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சுற்றுச்சூழல் சார்ந்த முக்கிய பிரச்சனைகள், மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை மற்றும் ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழி பொருட்களின் பயன்பாட்டால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
- **Published**: 2026-05-25
- **URL**: https://news.nammamap.in/press-release/21803-review-meeting-minister-environment-climate-change

---

மாசு கட்டுப்பாடு வாரியத்தின் இசைவாணை பெறாமல் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகள் மீது உடனடி மூடுதல் நடவடிக்கை

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்காமல் தொழிற்கழிவு நீரை வெளியேற்றும் தொழிற்சாலைகள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள்

ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகத்தை உறுதிப்படுத்துதல்

ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் நெகிழி பொருட்களின் பயன்பாட்டால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரங்கள்

ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் நெகிழி பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கைகள்
---
- [All articles](https://news.nammamap.in/press-release)