# கர்நாடக அரசால் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை தொடர்பாக உத்தேசிக்கப்பட்டுள்ள பூமிபூஜை நிகழ்வைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டிடவும், விவசாயிகளின் நலனைக் காத்திடவும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (26.05.2026) மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு எழுதியுள்ள கடிதம்.

> மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், கர்நாடக அரசால் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், உச்சநீதிமன்றத் தீர்ப்புகளையும் சுற்றுச்சூழல் சட்டங்களையும் மீறுவதாகவும், தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்தும் எனவும் குறிப்பிட்டு மாண்புமிகு இந்தியப் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
- **Published**: 2026-05-26
- **URL**: https://news.nammamap.in/press-release/21806-tamil-nadu-chief-minister-mekedatu-dam-project-karnataka

---

ஜல் சக்தி அமைச்சகம் (MoJS) மற்றும் மத்திய நீர்வள ஆணையம் (CWC) ஆகியவை மேகதாது திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கையை (DPR) நிராகரிக்க உத்தரவிட வேண்டும்.

கர்நாடக அரசு காவிரி அல்லது அதன் துணை நதிகளில், படுகையில் உள்ள மற்ற மாநிலங்களின் ஒப்புதல் இன்றி புதிய திட்டங்கள் எதையும் மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்த வேண்டும்.

மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் பிப்ரவரி 16, 2018 தேதியிட்ட தீர்ப்பு முழுமையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)