# தியாகராய நகர் சட்டமன்ற தொகுதி வளர்ச்சி பணிகள் மற்றும் திட்டங்கள் குறித்த ஆலோசனை கூட்டம் - மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு என்.ஆனந்த் அறிவுறுத்தல்கள்

> மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு என்.ஆனந்த், தியாகராய நகர் சட்டமன்ற தொகுதி வளர்ச்சி பணிகள் மற்றும் திட்டங்கள் குறித்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தி முக்கிய அறிவுரைகளை வழங்கினார்.
- **Published**: 2026-05-26
- **URL**: https://news.nammamap.in/press-release/21808-t-nagar-development-works-projects

---

பொதுமக்கள் பாதுகாப்புக்கு எந்த வித பாதிப்பும் வரக்கூடாது.

சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்க வேண்டும்.

தொகுதி முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.

தொகுதி முழுவதும் இரவு நேரங்களிலும் வெளிச்சம் உள்ள வகையில் தெரு விளக்குகள் அமைக்கப்பட வேண்டும்.

இருள் இல்லாத பகுதியாக தியாகராய நகர் பகுதி முழுவதும் இருக்க வேண்டும்.

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், குறிப்பாக பெண் குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

கஞ்சா போன்ற போதை வஸ்துக்களின் நடவடிக்கைகள் தொகுதியில் எங்குமே இருக்கக் கூடாது.

டாஸ்மாக் கடைகள் சரியான நேரத்தில் மூடப்பட வேண்டும்.

பள்ளிக்கூடங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும்.

போக்குவரத்து நெரிசல் இல்லாமல் போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும்.

மக்களின் அத்தியாவசிய தேவைகளை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும்.

மின்சாரம், தண்ணீர், மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் அனைத்து பிரச்சனையும் இல்லாமல் பொதுமக்களுக்கு கிடைத்திட வேண்டும்.

தெரு நாய்கள் பிரச்சனை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)