# காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 51வது கூட்டம்

> காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 51வது கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது. தமிழக உறுப்பினர் கர்நாடகாவிலிருந்து பெறப்பட்ட கூடுதல் நீரை அங்கீகரிக்க மறுத்து, தமிழகத்திற்கான பங்கை பில்லிகுண்டுலுவில் உறுதி செய்ய வலியுறுத்தினார்.
- **Published**: 2026-05-26
- **URL**: https://news.nammamap.in/press-release/21812-cauvery-water-management-authority-meeting

---

மேட்டூர் அணையின் நீர் இருப்பு 25.05.2026 அன்று 40.742 டி.எம்.சி ஆக உள்ளது.

குடிநீர், தொழிற்சாலை பயன்பாட்டிற்கும் மற்றும் சுற்றுச்சூழல் நீர் ஓட்டத்திற்காகவும் வினாடிக்கு 1003 கன அடி நீர் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படுகிறது.

நடப்பு நீர்பாசன ஆண்டில் (2025-2026), ஜூன் 1, 2025 முதல் மே 24, 2026 வரை பில்லிகுண்டுலுவில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரின் அளவு 176.685 டி.எம்.சி-க்கு பதிலாக மிகை நீர் உள்பட 329.166 டி.எம்.சி. கிடைத்துள்ளது.

கர்நாடகம் அளித்த மிகை நீரை கணக்கில் கொள்ள வேண்டும் என்ற கருத்தை தமிழகம் ஏற்க மறுத்தது.

தென்மேற்கு பருவமழை 2026 மே 26 அன்று கேரளாவில் துவங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு 2026 ஜூன் மாதம் வழங்கப்பட வேண்டிய 9.91 டி.எம்.சி நீரினை உச்சநீதிமன்ற ஆணையின்படி பில்லிகுண்டுலுவில் உறுதிசெய்யுமாறு ஆணையத்தை தமிழகம் வலியுறுத்தியது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)