# திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணப்பாறை சிப்காட் தொழில் பூங்கா மற்றும் மெகா உணவு பூங்காவினை மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் செல்வி ச. கீர்த்தனா அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

> தொழில்துறை உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், சமச்சீரான வட்டாரத் தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் செல்வி ச. கீர்த்தனா அவர்கள் இன்று (26.05.2026) திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறையில் அமைந்துள்ள சிப்காட் (SIPCOT) தொழிற்பூங்கா மற்றும் மெகா உணவுப் பூங்காவில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
- **Published**: 2026-05-26
- **URL**: https://news.nammamap.in/press-release/21813-keerthana-inspected-manapparai-sipcot-food-park-tiruchirappalli

---

தொழில் நிறுவனங்களுடன் இணைந்து பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க சிறப்பு கவனம் செலுத்தி, வேலைவாய்ப்பு மற்றும் பணி நியமன முகாம்களை நடத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்.

தொழிற்பூங்கா வளாகத்திற்குள் மேம்படுத்தப்பட்ட பேருந்து நிறுத்த வசதிகள் மற்றும் பொதுப் போக்குவரத்து இணைப்பிற்கான தகுந்த உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதி.

சேவை கோரிக்கைகள் மற்றும் சட்டரீதியான ஒப்புதல்களை விரைந்து பரிசீலித்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்.

ஐ.டி.ஐ மற்றும் பல்தொழில்நுட்பக் கல்லூரிகளுடன் இணைந்து 'தொழில்துறை-கல்வி நிறுவனக் கூட்டு முயற்சி' வாயிலாக உள்ளூர் இளைஞர்களுக்குத் தொழில்துறை சார்ந்த திறன்களைக் கற்றுக்கொடுப்பதற்கான புதிய முன்னெடுப்பு.

உலகத்தரம் வாய்ந்த தொழில்சார் உள்கட்டமைப்பை உருவாக்குவதிலும், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களுக்கு முதலீடுகளை ஈர்ப்பதிலும், பெருமளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், மாநிலம் முழுவதும் உள்ள தொழில் சூழல் அமைப்பை வலுப்படுத்துவதிலும் தமிழக அரசின் உறுதிப்பாட்டை வலியுறுத்தல்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)