# சிறுபான்மையினர் நலத் திட்டங்கள் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது

> மாண்புமிகு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு. ஏ.எம்.ஷாஜஹான் அவர்களின் தலைமையில் இன்று (26.05.2026) தலைமைச் செயலகத்தில் சிறுபான்மையினர் நலத் திட்டங்கள் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
- **Published**: 2026-05-26
- **URL**: https://news.nammamap.in/press-release/21816-minority-welfare-schemes-review-meeting

---

அனைத்து சிறுபான்மையினர் நலத் திட்டங்களையும் உரிய காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும்.

திட்டங்களின் பயன்கள் மக்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.

உதவித் தொகைகள், கடன் வசதி, புனித பயணங்களுக்கான விண்ணப்பங்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்கள் புனரமைப்பு, அடக்கஸ்தலங்களுக்கான இடம் தேர்வு செய்தல் தொடர்பான கோரிக்கைகளுக்கு தனிக் கவனம் செலுத்தி உடனுக்குடன் தீர்வு காண வேண்டும்.

அரசின் நலத்திட்டங்கள் தொடர்பாக தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

அடுத்த ஆய்வுக் கூட்டத்தில் துறையின் அனைத்து திட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும்.

சிறுபான்மையினருக்கான நலத்திட்டங்களை அலுவலர்கள் மிகுந்த முனைப்புடன் செவ்வனே செயல்படுத்த வேண்டும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)