# கிருஷ்ணகிரி அணையிலிருந்து உபரிநீர் திறப்பு காரணமாக வெள்ள அபாய எச்சரிக்கை

> கிருஷ்ணகிரி அணையிலிருந்து உபரிநீர் திறக்கப்படுவதால், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் தென்பெண்ணையாற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும், ஆற்றில் குளிக்கவோ அல்லது கால்நடைகளை கொண்டு செல்லவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.
- **Published**: 2026-05-26
- **URL**: https://news.nammamap.in/press-release/21818-flood-warning-water-release-krishnagiri-dam

---

சாத்தனூர் அணை வரை உள்ள தென்பெண்ணையாற்றங்கரையோரத்தில் மற்றும் தாழ்வானப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது.

அணைக்கு அதிகப்படியான தண்ணீர் வரும் பட்சத்தில் படிப்படியாக ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படும்.

8 மணிக்குள் 1000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படும்.

தென்பெண்ணையாற்றின் கரையோரத்தில் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறது.

ஆற்றில் குளிக்கவோ, கால்நடைகளை கொண்டு செல்லவோ தடை விதிக்கப்படுகிறது.

பெரியமுத்தூர், திம்மாபுரம், சுண்டேகுப்பம், காவேரிப்பட்டிணம், காவேஹள்ளி, பெண்ணேஸ்வரமடம், சௌட்டஹள்ளி, தளிஹள்ளி ஆகிய 8 கிராமங்கள் வெள்ள அபாய எச்சரிக்கைக்கு உட்பட்டுள்ளன.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)