# மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

> மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. செ. ராஜேஷ் குமார் தலைமையில் சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டை தென்கிழக்கு ஆசியாவின் முன்னணி சுற்றுலா இடமாக உயர்த்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
- **Published**: 2026-05-27
- **URL**: https://news.nammamap.in/press-release/21824-tourism-minister-chairs-review-meeting

---

அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டினை தென்கிழக்கு ஆசியாவின் முன்னணி சுற்றுலா இடங்களில் ஒன்றாக உயர்த்துதல்.

உயர்தர சுற்றுலா கட்டமைப்பினை உருவாக்குதல்.

புதிய வகை சுற்றுலா அனுபவங்களை வடிவமைத்து செயல்படுத்துதல்.

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகள் முன்னெடுத்தல்.

புதிய, முழுமையான சுற்றுலா அனுபவத்திற்கு தேவையான நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல்.

தொழிலாளர் பயிற்சிகள் வழங்குதல்.

செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகள் மூலம் சுற்றுலா நிர்வாகத்தின் திறனை உயர்த்துதல்.

பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாட்டின் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்துதல்.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டினை சிறந்த சுற்றுலா வசதிகள் கொண்ட மாநிலமாக உருவாக்குதல்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)