# மாண்புமிகு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் தலைமையில் தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

> மாண்புமிகு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் தலைமையில் சென்னை, நந்தனத்தில் தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனம் (டான்செம்) மற்றும் தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிமெண்ட் விற்பனையை அதிகரிப்பது மற்றும் மாநிலத்தில் தொழில் வளர்ச்சி மற்றும் புதிய முதலீடுகளை விரைவுபடுத்துவதற்கான உத்திகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
- **Published**: 2026-05-27
- **URL**: https://news.nammamap.in/press-release/21827-tamil-nadu-cements-guidance-bureau-review

---

டான்செம் நிறுவனமானது திறந்த சந்தையிலும், அரசுத் துறைகளுக்கும் சிமெண்ட் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசுத் துறைகளில் நடைபெறும் கட்டுமானப் பணிகள் குறித்த விவரங்களைச் சேகரித்து, சிமெண்ட் தேவையினை அறிந்து கொள்ள வேண்டும்.

தேவைக்கேற்ப சந்தைப்படுத்துதல் முறையை பின்பற்ற வேண்டும்.

தமிழ்நாட்டில் மேம்பட்ட உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தொழில் துறை உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

புதிய முதலீடுகளை விரைவுபடுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டை முன்னணி தொழில் மற்றும் உற்பத்தி மாநிலமாக வலுப்படுத்த வேண்டும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)