# போதை பழக்கவழக்கங்களிலிருந்து இளைய சமுதாயத்தை மீட்டெடுக்க கல்வித் துறை மற்றும் விளையாட்டுத் துறை இணைந்து அறிவியல் பூர்வமான கல்வியை வழங்க நடவடிக்கை.

> போதை பழக்கவழக்கங்களிலிருந்து இளைய சமுதாயத்தை மீட்டெடுக்க கல்வித் துறை மற்றும் விளையாட்டுத் துறை இணைந்து அறிவியல் பூர்வமான கல்வியை வழங்க நடவடிக்கை. கல்வி பயிலும் காலங்களிலேயே மாணாக்கர்களின் உடல் நலம், மன நலத்தை மேம்படுத்த விளையாட்டு துறையுடன் இணைந்து அறிவியல் பூர்வமான பயிற்சி வழங்கிட நடவடிக்கை.
- **Published**: 2026-05-27
- **URL**: https://news.nammamap.in/press-release/21828-school-sports-scientific-education-youth-drug-addiction

---

போதை பழக்கவழக்கங்களிலிருந்து இளைய சமுதாயத்தை மீட்டெடுக்க கல்வித் துறை மற்றும் விளையாட்டுத் துறை இணைந்து அறிவியல் பூர்வமான கல்வியை வழங்கும்.

கல்வி பயிலும் காலங்களிலேயே மாணாக்கர்களின் உடல் நலம், மன நலத்தை மேம்படுத்த விளையாட்டு துறையுடன் இணைந்து அறிவியல் பூர்வமான பயிற்சி வழங்கப்படும்.

பள்ளிக்கல்வி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை இணைந்து குழந்தைகளுக்கு கல்விக்கு நிகராக விளையாட்டிற்கும் முக்கியத்துவம் அளிக்கும்.

அனைத்து பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துடன் ஒருங்கிணைத்து, நீச்சல் மற்றும் நெடுந்தூர தடகளம் போன்ற போட்டிகளில் திறன் கொண்ட மாணவர்களை கண்டறிந்து, அறிவியல் அடிப்படையிலான பயிற்சிகள் அளிக்கப்படும்.

தேசிய மற்றும் உலக அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு அரசுத் துறையில் 3% விளையாட்டு இட ஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும்.

மாணாக்கர்களை உடல் மற்றும் மனது அளவிலும் தன்னம்பிக்கை உடையவர்களாகவும், வலிமை உடையவர்களாகவும் திகழச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)