# மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களை புதுதில்லியிலுள்ள பிரதமரின் அலுவலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சந்தித்துப் பேசினார்.

> மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், புதுதில்லியிலுள்ள பிரதமரின் அலுவலகத்தில் இன்று (27.05.2026) மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
- **Published**: 2026-05-27
- **URL**: https://news.nammamap.in/press-release/21829-s-joseph-vijay-met-narendra-modi-new-delhi

---

ஆனைமங்கலச் செப்பேடுகளை மீட்டு இந்தியாவுக்குக் கொண்டு வந்தமைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் மாநில வாழ்த்துப்பாடலைப் பாடுவதற்கு உள்துறை அமைச்சகத்தால் உரிய தெளிவுரையினை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

வான்வழி அமைப்பு மையத்தினை (CABS) தமிழ்நாட்டில் அமைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

மேகதாது அணைத் திட்டத்தினை அனுமதிக்கக் கூடாது என ஜல் சக்தி அமைச்சகத்திற்கும், மத்திய நீர்வள ஆணையத்திற்கும் அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க இலங்கை அரசை, இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)