# தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம்

> முதலமைச்சர் உத்தரவின்படி, மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு. ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் பொதுப் போக்குவரத்து சேவைகளை மேம்படுத்துதல், வருவாயை உயர்த்துதல் மற்றும் பேருந்துகளை நவீனமயமாக்குதல் குறித்து விவாதிக்கப்பட்டது.
- **Published**: 2026-05-27
- **URL**: https://news.nammamap.in/press-release/21834-tamil-nadu-government-transport-corporations

---

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

பொதுமக்கள் பெரிதும் சார்ந்துள்ள பொதுப் போக்குவரத்தினை நிறைவாக அளித்திட வேண்டும்.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் வருவாயை உயர்த்த அனைத்து வழிவகைகளையும் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பேருந்து நிலையங்களில் பயணிகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்கவும், நிழற்குடை இல்லாத இடங்களில் நகராட்சி/உள்ளாட்சித் துறை மூலம் நிழற்குடை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தகவல் தொழில்நுட்பத்தை முழுவதுமாகப் பயன்படுத்தி போக்குவரத்துத் துறையின் செயல்பாடுகளை மேம்படுத்தி பயணிகளுக்கு நிகழ்நேர அடிப்படையில் தகவல்களை வழங்க வேண்டும்.

பேருந்துகளை நவீனமயமாக்க வேண்டும்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இயக்கப்படும் பேருந்து இயக்கங்களை மக்கள் சிரமம் இல்லாமல் பயன்படுத்திட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

பேருந்துகள் நிற்கும் உணவகங்களில் உணவின் தரத்தை உறுதிபடுத்த வேண்டும்.

பயணிகளுக்குத் தேவையான வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

பேருந்து வசதியே இல்லாத கிராமங்களை கண்டறிந்து, மிக விரைவாகப் போக்குவரத்து வசதியை அப்பொது மக்கள் பயன்பெறும் வகையில் ஏற்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)