# பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வைகாசி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினத்தன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு

> வைகாசி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினங்களில் ஆவணப் பதிவுகளுக்காக பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
- **Published**: 2026-05-28
- **URL**: https://news.nammamap.in/press-release/21838-advance-booking-tokens-sub-registrar-offices-vaikasi

---

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வைகாசி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினத்தன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படும்.

29.05.2026 அன்று ஒரு சார்பதிவாளர் அலுவலகத்திற்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் ஒதுக்கப்படும்.

அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளும், கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் வழங்கப்படும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)