# மாணாக்கர்களின் நலன் கருதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பாடப்பிரிவிற்கு விண்ணப்ப பதிவு செய்ய தவறிய மாணாக்கர்களுக்காக விண்ணப்பங்கள் மீண்டும் இணைய தளம் வாயிலாக 01.06.2026 முதல் பெறப்படும்.

> அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு தேதி நீட்டிப்பு; மாணவர்கள் நலன் கருதி மீண்டும் 01.06.2026 முதல் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இயலாத மாணவர்களுக்கு சேர்க்கை உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
- **Published**: 2026-05-29
- **URL**: https://news.nammamap.in/press-release/21843-government-arts-science-colleges-undergraduate-applications

---

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பாடப்பிரிவுகளுக்கான விண்ணப்ப பதிவு செய்ய தவறிய மாணாக்கர்களுக்காக விண்ணப்பங்கள் மீண்டும் 01.06.2026 முதல் இணையதளம் வாயிலாக பெறப்படும்.

இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்களுக்கு அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் (Admission Facilitation Centre - AFC) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மாணாக்கர் சேர்க்கை தொடர்பான ஐயங்களுக்கு விளக்கம் பெற கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை 044-24343106 / 24342911 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)