# உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - 2026ஆம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை - அறிவிப்பு

> தமிழ்நாடு அரசு அங்கீகாரத்துடன், சென்னை, தரமணியில் இயங்கும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித்தொகையுடன் நடத்தப்படும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பு (Five Years Integrated P.G. M.A. in Tamil) மற்றும் முதுகலைப் பட்டப் படிப்பு (M.A. Tamil) ஆகிய படிப்புகளுக்கான 2026-27ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு.
- **Published**: 2026-05-29
- **URL**: https://news.nammamap.in/press-release/21848-world-tamil-research-institute-admission-2026

---

2026-27ஆம் கல்வியாண்டில் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பு மற்றும் முதுகலைத் தமிழ் பட்டப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.

தேர்வின் அடிப்படையில் 15 மாணவர்களுக்கு திங்கள்தோறும் தமிழ்நாடு அரசால் ரூ.2000/- வீதம் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

இருபாலருக்கான தனித்தனி கட்டணமில்லா தங்கும் விடுதி வசதி மற்றும் உணவு வசதி உள்ளது.

சேர்க்கைத் தொடர்பான விதிமுறைகள்/தகவல்கள் மற்றும் விண்ணப்பத்தை www.ulakaththamizh.in என்ற இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது நேரில் பெற்றுக் கொள்ளலாம்.

ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டப் படிப்புக்கான விண்ணப்பங்களை 15.06.2026 (திங்கள்) தேதிக்குள்ளும், முதுகலைத் தமிழ் பட்டப் படிப்புக்கான விண்ணப்பங்களை 30.06.2026 (செவ்வாய்) தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)