# வெளிமாநிலங்களில் தற்போது இயக்கத்தில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த தேசிய அனுமதி சரக்கு வாகனங்கள், "Tamil Nadu Suraksha Mitra Portal" வாயிலாக வாகன இருப்பிட கண்காணிப்பு கருவி அங்கீகாரம் வழங்கும் சிறப்பு வசதியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.ஆ.விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள் தகவல்.

> வெளிமாநிலங்களில் இயங்கும் தேசிய அனுமதி சரக்கு வாகனங்கள், "தமிழ்நாடு சுரக்ஷா மித்ரா போர்ட்டல்" வாயிலாக வாகன இருப்பிட கண்காணிப்பு கருவி அங்கீகாரத்தைப் பெற இரண்டு வார கால தற்காலிக சிறப்பு வசதியை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
- **Published**: 2026-05-29
- **URL**: https://news.nammamap.in/press-release/21850-special-facility-national-permit-cargo-vehicles-vltd-approval-tamil

---

வெளிமாநிலங்களில் இயங்கும் தேசிய அனுமதி சரக்கு வாகனங்களுக்கு "Tamil Nadu Suraksha Mitra Portal" வாயிலாக வாகன இருப்பிட கண்காணிப்பு கருவி அங்கீகாரம் வழங்கும் சிறப்பு வசதி இரண்டு வார காலத்திற்கு தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தேசிய அனுமதி வாகன உரிமையாளர்கள் இந்த தற்காலிக சிறப்பு வசதியைப் பயன்படுத்தி தங்களது வாகனத்திற்கான அங்கீகார கட்டணத்தை செலுத்திக்கொள்ள வேண்டும்.

தேசிய அனுமதி தொடர்பான வாகன் இணையதளத்திலும் இதேபோன்ற தளர்வு வழங்கிட மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)