# திருநெல்வேலி மாவட்டத்தில் கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு

> திருநெல்வேலி மாவட்டத்தில், தாமிரபரணி பாசன அமைப்பில் உள்ள 4 கால்வாய்களின் கீழுள்ள 10265 ஏக்கர் நேரடி பாசனப்பரப்பு நிலங்களுக்கு, கார் பருவ சாகுபடிக்கு 01.06.2026 முதல் 02.10.2026 வரை பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.
- **Published**: 2026-05-30
- **URL**: https://news.nammamap.in/press-release/21853-water-release-kar-season-irrigation-tirunelveli

---

பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறப்புக்கு அனுமதி.

01.06.2026 முதல் 02.10.2026 முடிய (124 நாட்கள்) 1710.83 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்படும்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி பாசன அமைப்பில் உள்ள வடக்கு கோடைமேலழகியான், தெற்கு கோடை மேலழகியான், நதியுண்ணி மற்றும் கன்னடியன் கால்வாய்களின் கீழ் வரும் 10265 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)