# கோயம்புத்தூர், நேரு விளையாட்டரங்கில் உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பு வசதிகள் மற்றும் மேற்கொள்ளப்படவேண்டிய புதிய திட்டப்பணிகள் குறித்து அமைச்சர் திரு.ஆதவ் அர்ஜுனா அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு

> மாண்புமிகு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.ஆதவ் அர்ஜுனா அவர்கள் கோயம்புத்தூர் நேரு விளையாட்டரங்கில் உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பு வசதிகள் மற்றும் புதிய திட்டப்பணிகள் குறித்து 31.05.2026 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
- **Published**: 2026-05-31
- **URL**: https://news.nammamap.in/press-release/21854-aadhav-arjuna-inspects-new-projects-nehru-sports-stadium-coimbatore

---

கோயம்புத்தூர் நேரு விளையாட்டரங்கில் உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பு வசதிகள் மற்றும் புதிய திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

விளையாட்டு விடுதியில் புதிய வாள்வீச்சு பிரிவு மற்றும் ரோடு பைக்பயிற்சி தொடங்கப்பட்டு, மாணவர் எண்ணிக்கை 60லிருந்து 75 ஆக உயர்த்தப்படும்.

ரூ.7.95 கோடி மதிப்பீட்டில் புதிய நவீன விளையாட்டு விடுதி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

நடைபெற்று வரும் பணிகளை தரமாகவும், உரிய கால அளவிலும் முடித்திட அமைச்சர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)