# பலவகை தொழில்நுட்ப கல்லூரியில் இந்த கல்வியாண்டு 3 புதிய பாடப்பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டு, 3,570 புதிய இடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது - மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் திரு. பெ.விஸ்வநாதன் அவர்கள் தகவல்

> நடப்பு கல்வியாண்டில் பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளில் 3 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டு 3,570 புதிய இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 2026-2027 ஆம் கல்வியாண்டுக்கான அரசு பொறியியல், கலை, அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்த ஆய்வுக்கூட்டம் உயர்கல்வித் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.
- **Published**: 2026-06-01
- **URL**: https://news.nammamap.in/press-release/21861-three-new-courses-polytechnic-colleges-3570-seats

---

பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளில் 3 புதிய பாடப்பிரிவுகள் மற்றும் 3,570 புதிய இடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.

TATA நிறுவனத்துடன் இணைந்து 44 அரசு தொழில்நுட்பக் கல்லூரிகளில் டிஜிட்டல் மேனுஃபேக்சரிங் டெக்னாலஜிஸ், ஆட்டோமேஷன் அண்ட் ரோபோடிக்ஸ், இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் ஆகிய 3 புதிய படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான முதலாமாண்டு, நேரடி இரண்டாமாண்டு மற்றும் பகுதிநேரப் பட்டயப்படிப்பிற்கு https://www.tnpoly.in இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பொறியியல் மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு கடைசி நாள் ஜூன் 5, 2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பப் பதிவு செய்யத் தவறிய மாணாக்கர்களுக்காக www.tngasa.in இணையதளம் வாயிலாக ஜூன் 1, 2026 முதல் இரண்டு நாட்களுக்கு மீண்டும் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான சிறப்பு ஒதுக்கீட்டு கலந்தாய்வு (மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் உட்பட) ஜூன் 5, 2026 முதல் ஜூன் 6, 2026 வரை நடைபெறும்.

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான பொது கலந்தாய்வு ஜூன் 8, 2026 முதல் அந்தந்த கல்லூரிகளில் நடைபெறும்.

விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்துள்ள மாணாக்கர்களுக்கு விளையாட்டு சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி ஜூன் 1, 2026 முதல் ஜூன் 15, 2026 வரை நடைபெறும்.

இரண்டாம் மற்றும் மூன்றாமாண்டு பயிலும் மாணாக்கர்களுக்கு வகுப்புகள் ஜூன் 15, 2026 அன்றும், முதலாமாண்டு மாணாக்கர்களுக்கு வகுப்புகள் ஜூலை 1, 2026 அன்றும் தொடங்கப்படும்.

தாமாக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் (AFC) வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

கலை மற்றும் அறிவியல் கல்லூரி சேர்க்கைக்கு வயது வரம்பு 40 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)