# உயிர் நீர் இயக்கம் (ஜல் ஜீவன் மிஷன்) 2.0 செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசிற்கும், ஒன்றிய அரசிற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

> மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் மற்றும் மாண்புமிகு ஒன்றிய அரசின் ஜல் சக்தித் துறை அமைச்சர் திரு.சி.ஆர். பாட்டீல் ஆகியோர் முன்னிலையில், உயிர் நீர் இயக்கம் (ஜல் ஜீவன் மிஷன்) 2.0 திட்டத்தை செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு அரசுக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையே கையெழுத்தானது.
- **Published**: 2026-06-02
- **URL**: https://news.nammamap.in/press-release/21869-jal-jeevan-mission-20-tamil-nadu-union-mou

---

உயிர் நீர் இயக்கம் (ஜல் ஜீவன் மிஷன்) 2.0 செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

உயிர் நீர் இயக்கம் (ஜல் ஜீவன் மிஷன்) 2.0 திட்டம் 2028-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசின் குடிநீர் மற்றும் சுகாதாரத் துறையால் (DDWS) முதற்கட்டமாக ரூ.2,177.27 கோடி நிதி கிடைக்கப்பெறும்.

தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் உள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் பாதுகாப்பான, போதுமான மற்றும் நிலையான குடிநீர் வழங்கலை உறுதி செய்வதில் அரசு உறுதிபூண்டுள்ளது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)