# விதிமீறல்கள் கண்டறியப்பட்டு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்ட கல்குவாரிகளின் மீது எடுக்கப்படும் தொடர் நடவடிக்கை மற்றும் சட்ட விரோத கல்குவாரி மற்றும் அனுமதியின்றி கனிமங்களை எடுத்து செல்லுதல் போன்றவை நடைபெறாதவண்ணம் தடுக்க மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கை குறித்த ஆய்வு.

> தமிழக அரசு சட்டவிரோத கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது; இயற்கை வளத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தைத் தொடர்ந்து, 67 கல்குவாரிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, மேலும் 88 குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- **Published**: 2026-06-02
- **URL**: https://news.nammamap.in/press-release/21870-prevent-illegal-mining-quarrying-action-violations

---

67 கல்குவாரிகளின் பணிகள் விதிமீறல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, அபராத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 88 குவாரிகளின் பணிகளை நிறுத்த மேல்நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அனைத்து விதிமீறல்களுக்கும் எவ்வித சுணக்கமும் இன்றி உரிய நடவடிக்கை மற்றும் அபராதம் வசூலிப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

சட்டவிரோத கல்குவாரி மற்றும் கனிமப் போக்குவரத்தைத் தடுக்க எதிர்கால குத்தகை பகுதிகளிலும் மேம்படுத்தப்பட்ட டிரோன் ஆய்வுகள் கட்டாயமாக்கப்படும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)