# "பயறு வகைகளில் தன்னிறைவுக்கான இயக்கத்தில்" பயறுவகைகள் பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்க ஆர்வமுள்ள, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள்/தொகுப்பு அளவிலான கூட்டமைப்புகள்/தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள்/தனிநபர்கள் அதிகபட்சமாக 25 இலட்சம் ரூபாய் வரை மானியம் பெற மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு ர.வினோத் அவர்கள் தகவல்

> உளுந்து, பாசிப்பயறு, துவரை மற்றும் காராமணி ஆகிய பயறுவகைப் பயிர்களின் உற்பத்தியைப் பெருக்கி, பயறு வகைகள் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்திடும் நோக்கில் தமிழ்நாட்டில் வேளாண்மைத்துறையின் மூலம் மத்திய மற்றும் மாநில அரசின் பங்களிப்புடன் "பயறு வகைகளில் தன்னிறைவுக்கான இயக்கம்" 2025-26-ஆம் ஆண்டுமுதல் செயல்படுத்தப்படுகிறது. உற்பத்தியாகும் பயறுவகைகளை மதிப்புக்கூட்டிட ஏதுவாக இத்திட்டத்தில் பயறுவகைகள் பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்க 33 சதவீத மானியமாக அதிகபட்சமாக 25 இலட்சம் ரூபாய் வரை இந்த நிதியாண்டிலும் (2026-27) வழங்கப்பட உள்ளது.
- **Published**: 2026-06-03
- **URL**: https://news.nammamap.in/press-release/21879-farmers-subsidy-pulse-processing-units

---

தமிழ்நாட்டில் பயறு வகைகளில் தன்னிறைவு அடைய "பயறு வகைகளில் தன்னிறைவுக்கான இயக்கம்" 2025-26 முதல் செயல்படுத்தப்படுகிறது.

பயறுவகைகள் பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்க 33 சதவீத மானியமாக அதிகபட்சமாக 25 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும்.

இந்த மானியம் 2026-27 நிதியாண்டில் வழங்கப்படும்.

ஆர்வமுள்ள உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள்/தொகுப்பு அளவிலான கூட்டமைப்புகள்/தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள்/தனிநபர்கள் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.

தகுதியுள்ள பயனாளிகள் 12.06.2026-க்குள் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநரை (வேளாண் வணிகம்) அணுகி பயன்பெற வேண்டும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)