# மாண்புமிகு அமைச்சர் திரு. என். ஆனந்த் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார்

> மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. என். ஆனந்த், செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை திட்டப் பணிகளை ஆய்வு செய்தார். அவர் அலுவலக கோப்புகள், பதிவேடுகள் மற்றும் நாற்றாங்கால் பண்ணை, பயோ கேஸ் திட்டம், பிளாஸ்டிக் மேலாண்மை உள்ளிட்ட திட்டப் பணிகளைப் பார்வையிட்டு, பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடிக்க அறிவுறுத்தினார்.
- **Published**: 2026-06-03
- **URL**: https://news.nammamap.in/press-release/21884-ananth-inspects-rural-development-panchayat-schemes-chengalpattu

---

தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்துத் திட்டப்பணிகளையும் எவ்விதத் தொய்வுமின்றி, துரிதமாகவும், தரமாகவும் செய்து முடிக்க வேண்டும்.

சாமானிய மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் வகையில் புதிய திட்டப்பணிகளைத் திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும்.

திட்டங்களைச் செயல்படுத்தும்போது முழு வெளிப்படைத் தன்மையுடனும், தரத்துடனும் செயல்பட்டு, அவை பொதுமக்களுக்கு முழுமையாகப் பயனளிப்பதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கனவினை நனவாக்கும் வகையில் திட்டங்கள் செயல்பட வேண்டும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)