# இயற்கை வளங்கள் துறையின் செயல்பாடுகள் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

> மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (4.6.2026) தலைமைச் செயலகத்தில், இயற்கை வளங்கள் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
- **Published**: 2026-06-04
- **URL**: https://news.nammamap.in/press-release/21891-tamil-nadu-chief-minister-natural-resources-review

---

கனிமவள மேலாண்மையில் தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்றுதல்.

புவியியல் மற்றும் சுரங்கத் துறையால் அறிவியல் பூர்வமான கனிமவள ஆய்வு மற்றும் சுற்றுச்சூழல், பொதுமக்களுக்கு உகந்த கனிம அகழ்தல்.

கனிமக் குத்தகைக்கு விடப்பட்ட குவாரிகளைக் கண்காணிக்கவும், குத்தகைப் பகுதிகளிலிருந்து வெட்டி எடுக்கப்படும் கனிமத்தின் சரியான அளவைத் தீர்மானிக்கவும் ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்துதல்.

சட்டவிரோதமாக கனிமங்கள் கடத்தப்படுவதைத் தடுக்க நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல்.

கனிமவளங்களை நீடித்த வளர்ச்சிக்குப் பயன்படுத்தவும், கனிமவள வருவாயை மேம்படுத்தவும், சட்டவிரோத கனிமவள கடத்தலைத் தடுக்கவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தல்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)