# மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெற்றது.

> மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் தலைமையில் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெற்றது. தென்மேற்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பேரிடர் காலங்களில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
- **Published**: 2026-06-05
- **URL**: https://news.nammamap.in/press-release/21900-tamil-nadu-disaster-management-meeting-chief-minister-joseph-vijay

---

எந்தவொரு பேரிடர் சூழலையும் எதிர்கொள்ள அனைத்துத் துறையினரும் மற்றும் மாவட்ட நிர்வாகமும் தயார் நிலையில் இருப்பது மிகவும் அவசியம்.

பேரிடர்க் காலங்களில் உயிர் சேதத்தைத் தவிர்ப்பது முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்.

மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட அவசர கால செயல்பாட்டு மையம் 24x7 செயல்பட வேண்டும்.

மீட்பு உபகரணங்கள், முதல்நிலை மீட்பாளர்கள் மற்றும் மீட்புப் படையினர் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

தேவைப்படும் இடங்களில் மீட்புப் படையினர் முன்னரே நிலைநிறுத்தப்பட வேண்டும்.

நிவாரண மையங்களை தயார் நிலையில் வைத்து, தூய்மையாகப் பராமரிப்பதுடன், மின்சாரம், தேவையான உணவு, பாதுகாக்கப்பட்ட குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை உறுதி செய்ய வேண்டும்.

பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் மழைநீர்த் தேக்கம், சாலைகளில் மரங்கள் விழுதல் போன்ற மழைக்கால பாதிப்புகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பருவமழைக் காலங்களில் ஏற்படும் நோய்த்தொற்றுகளுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை ஊரக வளர்ச்சித் துறையினர், நகராட்சி நிர்வாகத் துறையினர் மற்றும் மருத்துவத்துறையினர் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்.

அறுந்து விழக்கூடிய நிலையில் உள்ள மின் கம்பிகள், பலவீனமான மின் கம்பங்கள், மின் கோபுரங்களை உடனடியாக மின்துறையினர் சீரமைக்க வேண்டும்.

மழைக்காலங்களில் மின் கம்பிகள் அறுந்துள்ளதாகத் தகவல் கிடைக்கப்பெறும் சூழல்களில் உடனடி நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

வடகிழக்குப் பருவமழை காலங்களில் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்கும் வகையில், நீர்நிலைகளைத் தூர்வாரும் பணிகள், ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு சுமார் நான்கு மாத காலங்கள் உள்ள நிலையில், அதற்குள் அனைத்து முன்னேற்பாட்டுப் பணிகளையும் நிறைவு செய்து தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)