# தமிழ்நாடு ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு 2025-2026

> தமிழ்நாடு வனத்துறை, பறவைகளின் பன்முகத்தன்மையைக் கண்காணித்து, பாதுகாப்புத் திட்டங்களை வலுப்படுத்தும் நோக்கில், 2023ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் மாநில அளவிலான ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 2025 டிசம்பர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஈரநிலப் பறவைகள் கணக்கெடுப்பும், 2026 பிப்ரவரி 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பும், வனத்துறை அதிகாரிகள், பறவை நிபுணர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பறவை பார்வையாளர்களின் தீவிர பங்கேற்புடன் நடத்தப்பட்டது.
- **Published**: 2026-06-05
- **URL**: https://news.nammamap.in/press-release/21904-tamil-nadu-integrated-bird-census-2025-2026

---

தமிழ்நாடு ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு 2025-2026 அறிக்கைகள் வெளியிடப்பட்டன.

விரிவான கணக்கெடுப்பு மூலம் தமிழ்நாட்டின் குறிப்பிடத்தக்க பறவைகள் பன்முகத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டது.

மத்திய ஆசிய பறவைப் பறப்புப் பாதையில் தமிழ்நாட்டின் ஈரநிலங்களின் முக்கிய வாழிடப் பங்கை எடுத்துக்காட்டுகிறது.

IUCN சிவப்பு பட்டியலில் உள்ள அச்சுறுத்தப்பட்ட 35 ஈரநிலப் பறவை இனங்கள் மற்றும் 36 நிலவாழ் பறவை இனங்கள் பதிவுசெய்யப்பட்டன.

அறிவியல் அடிப்படையிலான வாழிட மேலாண்மை மூலம் பறவைகள் பன்முகத்தன்மையை நீண்டகாலமாக கண்காணித்து பாதுகாக்கும் உறுதி.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)