# மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு.ர.வினோத் அவர்களின் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம்

> மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு.ர.வினோத் அவர்கள், 05.06.2026 அன்று, நடப்பு 2026-27ஆம் ஆண்டிற்கான வேளாண்மைத்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, புதிய திட்டங்களை உருவாக்குவது குறித்து விவாதித்தார்.
- **Published**: 2026-06-05
- **URL**: https://news.nammamap.in/press-release/21909-meeting-chaired-by-minister-agriculture-farmers-welfare-r-vinoth

---

2026-27ஆம் ஆண்டிற்கான வேளாண்மைத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு.

மத்திய, மாநில அரசுத் திட்டங்கள், நிதி ஒதுக்கீட்டு விவரங்கள், மாநில அரசின் சிறப்பு திட்ட செயல்பாடுகள் மற்றும் சாகுபடிப் பரப்பை உயர்த்தத் தேவையான வழிமுறைகள் குறித்து விவாதம்.

தடையில்லா இடுபொருட்கள் விநியோகம், இடுபொருட்கள் தரம், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றத் தேவையான வழிமுறைகள், உட்கட்டமைப்பு தணிக்கை மற்றும் நீதிமன்ற வழக்குகள் குறித்து ஆய்வு.

விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் வருமானம் மற்றும் வாழ்வாதாரத்தை உயர்த்திட, தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டங்களை, எதிர்வரும் சட்டமன்ற நிதிநிலை கூட்டத் தொடரில் அறிவிக்க ஏதுவாக, புதிய திட்டங்களை உருவாக்க அறிவுறுத்தல்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)