# தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் மற்றும் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை அமைச்சர் திரு.ர.வினோத் ஆய்வு செய்தார்.

> மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு.ர.வினோத் அவர்கள் 06.06.2026 அன்று தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், முழலை கிராமத்தில் அரசலாறு நீர்வழிதடத்திலுள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணிகள் மற்றும் சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- **Published**: 2026-06-06
- **URL**: https://news.nammamap.in/press-release/21914-water-hyacinth-removal-canal-desilting-thanjavur

---

அரசலாறு நீர்வழிதடத்தில் (6.60 கி.மீ தூரம்) ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணிகள் அவசர கால பணியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முழலை கிராமம் மற்றும் பிற பகுதிகளில் (மொத்தம் 26.65 கி.மீ) சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நீர்நிலைகளை பாதுகாக்கவும், பேரிடர் மீட்பு பணிகளை துரிதப்படுத்தவும் ரூ.3.50 கோடி மதிப்பில் 7 புதிய அதிநவீன மண்வாரி (Poclain) இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக அரசலாறு நீர்வழிதடத்தில் 2.30 கி.மீ தூரம் ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்டுள்ளன.

மீதமுள்ள 4.30 கி.மீ தூரம் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

கோவிலாச்சேரி, கல்லூர், திருநல்லூர் மற்றும் நீலத்தநல்லூர் கிராமங்களில் 26.65 கி.மீ நீளமுள்ள வாய்க்கால்கள் ரூ.9.25 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரப்பட்டு வருகின்றன.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)